10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியீடு..!
10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வினா-வங்கி புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வினா-வங்கி புத்தகங்கள் தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ஆம் வகுப்பிற்கு 8 புத்தகமும் ஆக மொத்தம் கீழ்க்கண்ட 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை செய்யப்பட்டு வருகிறது.