தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் 99 ரூபாய்க்கு குவாட்டர் மதுபான பாட்டில்..!
ஆந்திராவில் கடந்த ஏபரல் - மே மாதங்களில் மக்களவை தேர்தல் உடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஆகியவை இணைந்து இந்த சட்டப்பேரவை தேரத்லை சந்தித்தன. இதில் சந்திரபாபு நாயுடு வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். அதில் அவர் குறைந்த விலையில் தரமான மதுபானத்தை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படும் என தெரிவித்திருந்தார். இது பல்வேறு வாக்காளர்களை கவர்ந்ததாக கூறப்பட்டது. அந்த வகையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற சந்திரபாபு நாயுடு இந்த திட்டத்தை தற்போது செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளார் எனலாம்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் 180 மில்லி லிட்டர் கொண்ட குவாட்டர் பாட்டில் வெறும் 99 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என கலால் வரி இயக்குநர் நிஷாந்த் குமார் அறிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி 99 ரூபாய்க்கான குவாட்டர் பாட்டில்கள் அடங்கிய 10 ஆயிரம் பெட்டிகள் தற்போது விற்பனைக்கு மதுபான கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் இந்த 99 ரூபாய் குவாட்டரின் விற்பனை தினமும் 20 ஆயிரம் பெட்டிகள் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் பேசினார்.
மேலும் இந்த அக்டோபர் இறுதிக்குள் 99 ரூபாய் குவாட்டர்கள் அடங்கிய 2.40 லட்சம் பெட்டிகள் சந்தைக்கு வரும் என்றும் ஏறத்தாழ 1.20 கோடி குவாட்டர் பாட்டிகள் இந்த மாதத்திற்குள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் பேசினார். இந்த அக்டோபர் மாதத்தில் இந்த 99 ரூபாய் குவாட்டருக்கு வரும் டிமாண்டை பொறுத்து நவம்பர் மாதத்தில் எத்தனை பாட்டில்களை தயாரிக்கலாம் என முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.