1. Home
  2. தமிழ்நாடு

சென்னை அரசு பேருந்துகளில் QR ஸ்கேன் வசதி..!

1

சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளில் இதுவரை நேரடி பயணச்சீட்டு, மாதாந்திர சலுகை பயண அட்டை மற்றும் பள்ளி மாணவர்களுக்கான இலவச பயண அட்டை ஆகியவை வழங்கப்பட்டு வந்தன.

இதில் நேரடி பயணச்சீட்டு விற்பனையின் போது, சில்லறை பிரச்னைகள் மற்றும் நேர விரயம் ஆகியவை இருந்து வந்தன. இந்த நிலையில், சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்பட்டு முழுமை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், கடந்த பிப்ரவரி 28 முதல் மின்ணணு பயணச்சீட்டு இயந்திரம் (ETM மிஷின்கள்) பயன்பாட்டில் உள்ளது.

தற்போது, அனைத்து பணிமனைகளிலும் மின்ணணு பயணச்சீட்டு இயந்திரம் (ETM மிஷின்கள்) பயன்படுத்தப்படுகிறது. சராசரியாக தினமும் 16 லட்சம் பயணிகளுக்கு மின்ணணு பயணச்சீட்டு இயந்திரம் வாயிலாக பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

பயணிகள் பயணச்சீட்டு பெறுவதற்கான, ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), அட்டைகள் (Card), பணபரிவர்த்தனைக்கான வசதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மின்ணணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்குவது பயணிகளுக்கும், நடத்துநர்களுக்கும் கால விரயத்தை குறைத்து, பயணிகளுக்கு எந்தவித இடையூறு இல்லாமல் பயணம் செய்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

Trending News

Latest News

You May Like