1. Home
  2. தமிழ்நாடு

7-வது முறையாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி..!

1

பா.ஜ.க. சார்பில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், நாம் தமிழர் சார்பில் இசைமதிவாணன், அ.தி.மு.க. சார்பில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் போட்டியிட்டனர்.

தென்காசி தொகுதியில் ஏற்கனவே 1998, 1999, 2004, 2009, 2014, 2019 தேர்தல்களில் தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி 6 முறை தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 7-வது முறையாக களமிறங்கினார். அதன்படி, நேற்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் ஓட்டின் தொடக்கத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். பா.ஜ.க.வின் ஜான் பாண்டியன், அ.தி.மு.க.வின் ராணி ஸ்ரீகுமார் ஆகியோரை அவர் பின்னுக்கு தள்ளினார். பின்னர், தென்காசி லோக்சபா தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் முன்னிலை வகிக்க தொடங்கினார்.

இந்த நிலையில் இந்த தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்துள்ளார். சுமார் 1,30,000 வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளரிடம் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார். 1996-ல் நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட போதும் கிருஷ்ணசாமி தோல்வி அடைந்தார்.

Trending News

Latest News

You May Like