1. Home
  2. தமிழ்நாடு

படத்தோட டிக்கட்டை ப்ளாக்ல வித்தானுங்க. இப்ப சக்ஸஸ் மீட்..! லியோ சக்ஸஸ் மீட்டை கலாய்த்த ப்ளூசட்டை மாறன்..!

1

விஜய் - லோகேஷ் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம், பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதனையடுத்து இப்படத்தின் வெற்றி விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ படத்தின் வெற்றி விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

முன்னதாக படம் ரிலீஸாகும் முன்பு, லியோ இசை வெளியீட்டு விழா, கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாகவும், இதற்கு அரசியல் அழுத்தம் காரணமில்லை எனவும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், லியோ வெற்றி விழாவுக்கு போலீஸார் அனுமதியுடன் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.

லியோ சக்சஸ் மீட் பாஸ், ஆதார் அட்டை, மக்கள் இயக்கம் ஐடி கார்டு ஆகியவை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பணம் கொடுத்தும் லியோ வெற்றி விழாவுக்கு ரசிகர்கள் பாஸ் வாங்கியுள்ளனர். ஆனால் அவர்களில் பலருக்கும் லியோ வெற்றி விழா அரங்கிற்குள் செல்ல அனுமதி கொடுக்கவில்லை.

1

இதனால், விஜய் ரசிகர்கள் நேரு ஸ்டேடியம் வெளியே நின்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 10,000 ரூபாய் கொடுத்து விஜபி பாஸ் வாங்கியும் உள்ளே செல்ல அனுமதி தரவில்லை என புலம்பித் தீர்த்துள்ளனர்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதனைப் பார்த்த ப்ளூ சட்டை மாறன், "படத்தோட டிக்கட்டை ப்ளாக்ல வித்தானுங்க. இப்ப சக்ஸஸ் மீட் டிக்கட்டையும்.. பல ஆயிரத்துக்கு விக்கிறானுங்க போல‌. இதெல்லாம் ஒரு பொழப்பு" என விமர்சித்துள்ளார்.


 

Trending News

Latest News

You May Like