1. Home
  2. தமிழ்நாடு

போடு.. தகிட தகிட..சீனாவில் வெளியாகும் 'மகாராஜா' திரைப்படம்..!

1

இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து அவரது 50வது திரைப்படமாக கடந்த ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'மகாராஜா'.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், அபிராமி, முனிஷ்காந்த், நட்டி, சிங்கம் புலி, அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 'மகாராஜா' திரையரங்குகளில் வெளியானது முதல் அனைவரது பாராட்டையும் பெற்றது. சாதாரண பழி வாங்கும் கதையை நான் லீனியர் (Non linear) முறை திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் பாராட்டை பெற்றார்.

மேலும் விஜய் சேதுபதி தனது 50வது படமாக ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்ததற்கு பாராட்டை பெற்றார். இதுமட்டுமின்றி மகாராஜா படத்தில் நடிகர் சிங்கம் புலியின் நடிப்பு இப்படத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. 

சினிமா பிரபலங்கள் ரஜினிகாந்த் முதல் அனைவரும் மகாராஜா படத்தை பாராட்டினர். இப்படம் திரையரங்குகளில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி மகாராஜா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்கள் பார்த்த இந்திய படங்கள் வரிசையில் முதல் இடம் பிடித்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், 'மகாராஜா' திரைப்படத்தை சீன மொழியில் டப்பிங் செய்து சீனாவில் வருகிற 29-ந்தேதி வெளியிட உள்ளனர். அலிபாபா குழுமம் இப்படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

 


 

Trending News

Latest News

You May Like