புஷ்பா 2 ‘The Rule’ படத்தின் டீசர் வெளியானது..!
புஷ்பா முதல் பாகம் 2021ம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. தெலுங்கு உட்பட பான் இந்தியா மொழிகளில் வெளியான இந்தப் படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருந்தது. பக்கா கமர்சியல் மூவியாக உருவான புஷ்பா, மேக்கிங், பாடல்கள், பிஜிஎம், ஆக்ஷன் சீன்ஸ் உட்பட அனைத்திலும் செம்ம மாஸ் காட்டியது. அதேபோல் அல்லு அர்ஜுனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது.
முதல் பாகம் புஷ்பா தி ரைஸ் என வெளியான நிலையில், இரண்டாம் பாகம் புஷ்பா தி ரூல் என்ற கேப்ஷனுடன் ரிலீஸாகிறது. அதாவது முதல் பாகம் புஷ்பா கேரக்டரில் அல்லு அர்ஜுன் எப்படி எழுச்சிப் பெறுகிறான் என உருவாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து வெளியாகவுள்ள இரண்டாம் பாகமான புஷ்பா தி ரூல், அல்லு அர்ஜுன் எப்படி செம்மரக் கடத்தல் சாம்ராஜ்யத்தின் தலைவனாக விஸ்வரூபம் எடுக்கிறான் என்பது தான் ஒன்லைன்.
இந்நிலையில், அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு டீசர் வெளியாகியுள்ளது மேலும் இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாகவுள்ளது.