1. Home
  2. தமிழ்நாடு

தள்ளு.. தள்ளு.. தள்ளு.. நடுவழியில் பழுதாகி நின்ற ரயில்... தள்ளி இயக்கிய ஊழியர்கள்..!

1

உத்திர பிரதேச மாநிலத்தில் பழுதடைந்த ரயில் பெட்டியை ஊழியர்களை சேர்ந்து தள்ளிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோ எதிர்க்கட்சியினர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் கண்டனத்தையும் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.

உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரதான தண்டவாளத்தில் இருக்கும் இந்த ரயில் பெட்டி சில தொழில்நுட்ப காரணத்தினால் பழுதாகி இருக்கிறது.பிரதான தண்டவாளத்தில் இருக்கும் இந்த ரயில் பெட்டியை அருகில் இருக்கும் தண்டவாளத்திற்கு மாற்ற வேண்டுமென ஊழியர்கள் கையால் நகர்த்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிர, இதனை பார்த்து பகிர்ந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்.

இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த உத்திர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், "உடனே ரயில்வே அமைச்சரையும் அழையுங்கள்.. அவரும் உங்களுடன் சேர்ந்து ரயிலை நகர்த்தட்டும்.. பாஜகவின் தங்கை கூட்டணியான தேர்தல் பாத்திரத்தில் இருந்து எந்த செய்தியும் வரவில்லை போல.. அதனால், அமேதி பகுதி மக்களை ரயிலை தள்ள கட்டையாபடுத்தியது போல" என விமர்சித்தார்.


 

Trending News

Latest News

You May Like