1. Home
  2. தமிழ்நாடு

பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டம்... பக்தர்கள் 1500 பேருக்கு கொரோனா டெஸ்ட்!

பூரி ஜெகன்நாதர் ஆலய தேரோட்டம்... பக்தர்கள் 1500 பேருக்கு கொரோனா டெஸ்ட்!


உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பூரியில் ஒரு பெரும் கொரோனா வைரஸ் சோதனைகளை அம்மாநில அரசு மேற்கொண்டது.

புகழ் பெற்ற பூரி ரத யாத்திரையில் மொத்தம் மூன்று ரதங்கள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக பூரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் தேர்களை வடம் பிடித்து இழுப்பவர்கள் கொரோனா தொற்று இல்லாதவர்களாக இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து மூன்று ரதங்களை இழுக்க மொத்தம் 1500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பரிசோதனை நடைபெற்றது. இதற்கிடையில், ஒடிசா அரசுங்கம் பூரிக்கான அனைத்து நுழைவு வாயில்களையும் சீல் வைத்துள்ளது. ரத யாத்திரை ஏற்பாடு நோக்கத்திற்காக தவிர வேறு எந்த வாகனமும் பூரி நகரத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை.


கொரோனா பரவலுக்கு மத்தியில், பூரியில் ஜெகன்நாதரின் ரத யாத்திரையை நடத்துவது பெரிய சவால் என்றும், பல நூற்றாண்டுகள் பழமையான மரபுகளுக்கும், பொது சுகாதாரத்திற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்த உதவ வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like