1. Home
  2. தமிழ்நாடு

பஞ்சாப் அபார வெற்றி..!KKR-யை பந்தாடிய ஜானி பேர்ஸ்டோ-ஷசாந்த் சிங் ஜோடி!

1

ஈடன் கார்டனில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீசியது. ஃபில் சால்ட், சுனில் நரைன் இணைந்து கொல்கத்தா இன்னிங்சை தொடங்கினர். சூப்பர் பார்மில் இருக்கும் இருவரும் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட, கொல்கத்தா ஸ்கோர் எகிறியது. நரைன் 23 பந்தில் அரை சதம் விளாச, சால்ட் 25 பந்தில் அரை சதம் அடித்தார். நரைன் 71 ரன் (32 பந்து, 9 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ராகுல் சஹார் பந்துவீச்சில் பேர்ஸ்டோ வசம் பிடிபட்டார். சால்ட் 37 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சருடன் 75 ரன் விளாசி சாம் கரன் வேகத்தில் கிளீன் போல்டானார்.

அதன் பிறகும் கொல்கத்தா அதிரடி எந்த தொய்வும் இல்லாமல் தொடர்ந்தது. வெங்கடேஷ் 39 ரன் (23 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி கடைசி பந்தில் ரன் அவுட்டானார். கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய பஞ்சாப் 18.4 ஓவரிலேயே 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 262 ரன் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. ஜானி பேர்ஸ்டோவ் தனது அதிரடியால் 108 ரன் அவுட் இல்லை(48 பந்து,9 சிக்சர், 8 பவுண்டரி) எடுத்தார். சாஷசாங் சிங் 68* ரன்னும்(28 பந்து, 8 சிக்சர், 2 பவுண்டரி), பிரப்சிம்ரன் சிங் 54 ரன்னும்(20 பந்து 5 சிக்சர், 4 பவுண்டரி) எடுத்தனர்.

மேலும், ஒரு டி20 போட்டியில் அதிகபட்ச சிக்சர்கள்(41 சிக்சர்கள்) சாதனையும் முறியடிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக இந்த போட்டியில் 250 ரன்கள் சிக்சர்கள் மூலமாக மட்டுமே எடுக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like