1. Home
  2. தமிழ்நாடு

புதுவை முதல்வர் ரங்கசாமி, ஆளுநருடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை..!

1

சென்னையிலிருந்து நேற்று காலை புதுச்சேரி சென்ற  மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை ஆளுநர் மாளிகையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் வரவேற்றார். அதையடுத்து முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் துணைநிலை ஆளுநர் மாளிகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் புதுவையில் செயல்படுத்தப்பட்டு வரும் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் கேட்டறிந்ததாகவும், நிதி நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like