1. Home
  2. தமிழ்நாடு

புதுச்சேரி விடுதலை நாள் விழா! அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி !

புதுச்சேரி விடுதலை நாள் விழா! அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி !


புதுச்சேரி விடுதலை நாள் விழாவையொட்டி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ம் தேதி விடுதலை நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமாக உள்ள புதுச்சேரி மாநிலம் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஃபிரெஞ்சு அரசின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது.

புதுச்சேரி மாநிலம் கடந்த 1948-ம் ஆண்டு இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டுமா அல்லது ஃபிரெஞ்சு அரசின் கீழ் தொடர வேண்டுமா என்று பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, இரண்டு நாட்டு அரசுகளும் ஒப்புக்கொண்டன.

இந்த வாக்கெடுப்பு கடந்த 1954-ம் ஆண்டு அக்டோபர் 18 -ம் தேதி அன்று கீழூர் என்ற கிராமத்தில் நடைபெற்றது. அப்போது, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 178 பேரில் 170 பேர் இந்தியாவுடன் இணைய வேண்டும் என்று வாக்களித்தனர்.

இதையடுத்து இந்த நான்கு பகுதிகளை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நவம்பர் 1 -ம் தேதி முதல் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. இந்த விழா நாளை மறுநாள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதற்கான அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி காரைக்கால் கடற்கரை சாலையில் இன்று காலை நடைபெற்றது.

போலீசார் முகக் கவசங்கள் அணிந்து அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர். நாளை நடைபெற இருக்கிற நிகழ்ச்சியில் புதுச்சேரி கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் இந்திய தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதை தொடர்ந்து காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொள்கிறார்.

Trending News

Latest News

You May Like