1. Home
  2. தமிழ்நாடு

யூடியூபில் பேசிய டாக்டர் நம்பி உயிரிழந்த புதுச்சேரி வாலிபர் - மருத்துவமனையை மூட உத்தரவு..!

1

புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரான இவர், மார்க்கெட் கமிட்டி ஊழியராக உள்ளார். இவருக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என 2 மகன்கள் இருந்தனர். இவர்கள் இரட்டையர்கள் ஆவர். இவர்களுக்கு வயது 26. இதில் ஹேமச்சந்திரன் பிஎஸ்சி முடித்து விட்டு டிசைனிங் பணியில் உள்ளார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு எடுக்கப்பட்டு, அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். 

காவல் நிலையத்தில் செல்வநாதன் அளித்த புகாரில் கூறியிருப்பதவது, புதுச்சேரியில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் லாரி கிளீனர் ஆக பணிபுரிந்து வருகிறேன். எனது மூத்த மகன் ஹேமச்சந்திரன் 150 கிலோ எடையுடன் உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்தார். உடல் எடையை குறைக்க யூடியூப் மூலமாக சென்னையில் உள்ள மருத்துவரை தொடர்பு கொண்டார். அறுவை சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் செலவாகும் என தெரிவித்தனர்.

பின்னர் பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனை மூலம் அறுவை சிகிச்சை செய்ய அதே டாக்டர் மூலம் ஏற்படானது. இதற்கு ரூ.4 லட்சம் செலவாகும் என்று தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 22-ம் தேதி, டாக்டரால் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது ஹேமச்சந்திரனுக்கு உடல்நலம் குன்றிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர். ஆனால் அவர் இறந்து விட்டார். தவறான சிகிச்சை அளித்த டாக்டர் மற்றும் பம்மலில் உள்ள அறுவை சிகிச்சை நடந்த மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறைக்கு அளித்த புகரில் கூறியுள்ளார்.


உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது  குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இந்நிலையில்  எடை குறைப்பு சிகிச்சையின்போது புதுச்சேரியைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஹேமச்சந்திரன் உயிரிழந்த விவகாரத்தில் தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையைத் தற்காலிகமாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மருத்துவமனையில் உயிர் காக்கும் சிகிச்சைக்கான கருவிகள் இல்லை என்று உறுதியானதை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 


 

Trending News

Latest News

You May Like