புதுவை முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாள் : தலைவர்கள் வாழ்த்து..!
புதுவை முதல்வர் ரங்கசாமிக்கு இன்று பிறந்தநாள். முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் என்ஆர்.காங்கிரஸார் விமரிசையாகக் கொண்டாடுவர். இந்த ஆண்டும் தொகுதிதோறும் நலத்திட்ட உதவிகள் தருகின்றனர்.
தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமிக்கு பிரதமர் மோடி எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அச்செய்தியில், “புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் புதுச்சேரிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் நீண்ட ஆரோக்கிய வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில்,
மாண்புமிகு புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
தாங்கள் எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சியினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி, பல்வேறு தொகுதிகளில் இருந்து வரும் என்ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.