1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் ஷாக்..! இனி இவர்களுக்கு சிலிண்டர் மானியம் கிடைக்காது..!

1

பிரதான் மந்திரி உஜ்வல் யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேராதவர்கள் இந்தத் திட்டத்திற்கு தகுதிபெற முடியாது. பிரதான் மந்திரி உஜ்வல் யோஜனா திட்டத்தின் கீழ் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ. 1,600 வட்டியில்லா கடன், கேஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கப்படுகிறது.

பிபிஎல் ரேஷன் கார்டு உள்ள ஏழைக் குடும்பம் இத்திட்டத்தின் மூலம் எரிவாயு இணைப்பு பெற அரசு உதவும். ஏற்கெனவே சிலிண்டர் இணைப்பு இல்லாத ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் இதற்குத் தகுதியுடையவர்கள் ஆவர்.

இருப்பிடச் சான்றிதழ், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை, வங்கி பாஸ் புத்தக விவரங்கள், ஜாதிச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் தேவைப்படும்.

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் விண்ணப்பிக்க www.pmuy.gov.in என்ற இணையதளத்துக்குச் செல்ல வேண்டும். விண்ணப்பப் படிவத்தை அதில் பதிவிறக்கம் செய்யலாம். தேவையான விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். அருகில் உள்ள LPG எரிவாயு நிறுவன அலுவலகத்தில் அந்த விண்ணப்பத்தை சரியான ஆவணங்களுடன் கொடுக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் ஆவணங்கள் சரியானதா இல்லையா என்பதைச் சரிபார்த்த பிறக கேஸ் சிலிண்டர் உங்களுக்கு வழங்கப்படும்.

இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்தால் மட்டுமே, சமையல் சிலிண்டர் தடையின்றி கிடைக்கும் என பெட்ரோலிய நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இ-கேஒய்சி சரிபார்ப்பு செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் உடனே இந்த e-KYC சரிபார்ப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேஒய்சி செய்யாத வாடிக்கையாளர்களின் சிலிண்டர் இணைப்பு துண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல, மானிய உதவியும் நிறுத்தப்படும். 

Trending News

Latest News

You May Like