பொதுமக்கள் ஷாக்..! அரசு கேபிளில் ஆபாச படம் ஒளிபரப்பானதால்அதிர்ச்சி..!

தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் ஆபாசப்படம் ஒளிபரப்பானது. சேனலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மற்றும் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தர்மபுரி அரசு கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில், ''ஆபாசப்படம் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. இது குறித்து தகவல் தெரிந்தவுடன், சம்பந்தப்பட்ட சேனலின் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. மேலும், தனியார் சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.