பொதுமக்கள் ஷாக்..!தங்கத்தை விட மல்லிப்பூ விலை அதிகமா ..?

மதுரை மலர் சந்தையில் பூக்களின் விலை தாறுமாறாக எகிறியுள்ளது. அங்கு மல்லிகை ஒரு கிலோ மல்லிகை ரூ.7,000 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.3500க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.3,500 உயர்ந்துள்ளது.
பனிப்பொழிவு மற்றும் வரத்து குறைவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சமீப காலமாக பனிப்பொழிவு அதிகரித்துதான் காணப்படுகிறது. இதன் காரணமாக பூக்களின் வரத்து பாதிக்கப்பட்டிருக்க கூடிய வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
பூக்களின் விலை நிலவரம்:
மல்லிகை : 7000 ரூபாய்
முல்லை : 2500 ரூபாய்
பிச்சிப்பூ : 2500 ரூபாய்
கனகாம்பரம் : 2000 ரூபாய்
சம்பங்கி : 300 ரூபாய்
ரோஜா : 300 ரூபாய்
செவ்வந்தி : 250 ரூபாய்
அரளி- 200 ரூபாய்