1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் ஷாக்..! ஆவினில் முழு கிரீம் பால் அட்டைகள் திடீர் நிறுத்தம்!

Q

முழு கிரீம் பால் (FCM) அட்டைகளை வழங்குவதை ஆவின் நிறுத்தி உள்ளது.

இதனால், நகரம் முழுவதும் உள்ள பல்வேறு பால் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கங்களின் ஊழியர்கள் தரப்படுத்தப்பட்ட, டோன் செய்யப்பட்ட மற்றும் டெலைட் வகை பால் அட்டைகள் மட்டும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஆவின் இணையதளத்தில் முழு கிரீம் பால் (Full Cream Milk) அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான வசதி நீக்கப்பட்டுள்ளது.

முழு கிரீம் பால் ஒரு லிட்டர் ரூ.14 மானியத்துடன் ரூ.46-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஆவின் நிர்வாகத்துக்கு நிதி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், முழு கிரீம் பால் அட்டைகளை வழங்குவதை ஆவின் நிறுவனம் நிறுத்தி உள்ளது. முழு கிரீம் பாலை தவிற மற்ற பால் லிட்டருக்கு ரூ.2 மட்டுமே மானியம் வழங்கப்படுகின்றன.

முழு கரீம் பால் சில்லறை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூ.46-க்கு பதிலாக தனியார் முழு கிரீம் பால் வகைகளின் விலை லிட்டருக்கு ரூ.72 முதல் ரூ.76 வரை இருந்தது. இதற்கு ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகலை சமர்ப்பித்து முழு கிரீம் பால் அட்டைகளை அளித்து வந்தனர். இந்த நிலையில், புதிய முழு கிரீம் பால் அட்டைகள் இனி வழங்குவதை ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சென்னையில் தினமும் சுமார் 13 லட்சம் லிட்டர் ஆவின் பால் பயன்படுத்தப்படுகிறது, இதில், 5.5 முதல் 6 லட்சம் லிட்டர் வரை பால் அட்டைகள் மூலம் விநியோகிக்கப்படுகிறது. இதனால் சுமார் 10 லட்சம் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இதுதொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், வீட்டில் தயிருக்காக முழு கிரீம் பாலையை பயன்படுத்துவோம். இதற்காக முழு கிரீம் பால் அட்டையை பால் சொசைட்டியில் புதுப்பிக்க முயன்றபோது, அந்த அட்டை தற்போது வழங்கப்படவில்லை என தெரிவித்தனர். இதனால், தனியார் பால் பாக்கெட்டுகளையை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனிடையே, கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சென்னையில் முகவரி முறையாக இல்லாத காரணத்தால் சுமார் 80 ஆயிரம் மோசடி பால் அட்டைகளை ஆவின் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like