1. Home
  2. தமிழ்நாடு

அச்சத்தில் பொதுமக்கள்.. சிவகங்கைக்கு வந்துடுச்சு ஒமைக்ரான்..!

அச்சத்தில் பொதுமக்கள்.. சிவகங்கைக்கு வந்துடுச்சு ஒமைக்ரான்..!


உலகம் முழுக்க கொரோனா ஒமைக்ரான் வைரஸ் பரவி வரும் வேளையில் தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவக்குழு அமைக்கப்பட்டு வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.

இந்திய அளவில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. தமிழகம் முழுக்க ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒமைக்ரான் அறிகுறியுடன் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 47 வயது நபர் துபாயில் இருந்து வந்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் நடத்திய பரிசோதனையில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் வந்த காரைக்குடியைச் சேர்ந்த 42 வயது நபரை பரிசோதனை செய்ததில் அவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானது. இதையடுத்து அவருக்கு காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இவர் மூலம் அவருடைய குடும்பத்தில் உள்ள இருவருக்கும் ஒமைக்ரான் பரவி காரைக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒமைக்ரான் அறிகுறி இருப்பதால் சளி மாதிரிகள் சென்னைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் பரிசோதனை ரிசல்ட் வரும் என சுகாதாரத்துறை துணை இயக்குனர் ராம் குமார் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like