1. Home
  2. தமிழ்நாடு

வரும் 7-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு..!

1

சத் பூஜை தீபாவளிக்கு ஆறு நாள்களுக்குப் பிறகு கொண்டாடப்படுகிறது. மேலும், இது முக்கியமாக பீகார், ஜார்க்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் சத் பூஜையையொட்டி நவம்பர் 7-ம் தேதி டெல்லியில் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் சக்சேனா முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இதைத்தொடர்ந்து நவ 7-ஆம் தேதி டெல்லிக்கு பொது விடுமுறை என்று முதல்வர் அதிஷி வெள்ளிக்கிழமை அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "சத் திருவிழாவிற்கு நவம்பர் 7 அன்று விடுமுறை அறிவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் பூர்வாஞ்சல் நமது சகோதர சகோதரிகள் அனைவரும் விழாவை ஆடம்பரமாக கொண்டாடலாம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அந்த அறிக்கை தொடர்பான தனது கையெழுத்திட்ட உத்தரவையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like