பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவுப்பு..! அடுத்த மூன்று நாட்களுக்கு...

அடுத்த மூன்று நாட்களுக்கு 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று (மார்ச் 6) தெரிவித்துள்ளது. இந்நிலையில், சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குறைந்தது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
நடப்பாண்டில் அதிகபட்ச அளவாக ஈரோட்டில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 5 தினங்களை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு இன்று தொடங்கிய 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். அதேபோல தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.