பொதுமக்கள் அச்சம்..! பக்கத்து வீட்டு நாயை கடித்து குதறிய பிட்புல் ரக நாய்..!
இவர் வீட்டில் பிட்புல் ரக நாயை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த நாயை முகேஷ் வாயை கட்டாமல் சாலையில் அழைத்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி வாசிகள் பெரிதும் அச்சம் அடைந்து இது குறித்து நாய் உரிமையாளர்களிடம் பலமுறை கூறியும் கேட்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மீண்டும் முகேஷ் அந்த நாயை நேற்று வாய் கட்டாமல் சாலையில் நடக்க அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த பிட்புல் ரக நாய் ஆக்ரோஷமாக வீட்டருகே இருந்த புவனேஷ் என்பவரின் நாய் மீது பாய்ந்து முகத்தில் கடித்து குதறி உள்ளது.
அருகில் இருந்தவர்கள் எவ்வளவு முயன்றும் அந்த நாய் மற்றொரு நாய் முகத்தை விடாமல் கடித்து குதறியதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதில் அந்த நாய் மிக கோபமாக நாய்யை கடிப்பதும், மற்றொரு நாய் வலியில் துடிக்கும் காட்சிகள் பதிவாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
இந்நிலையில் ஆபத்தான நாய் என தெரிந்தும் அலட்சியமாக செயல்பட்டு வரும் உரிமையாளர் மீதும், அந்த நாயை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரியும் அவரின் வீட்டருகே இருந்த புவனேஷ் என்பவரும், அப்பகுதி மக்கள் சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.