1. Home
  2. தமிழ்நாடு

இனி 10ம் வகுப்பிற்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத் தேர்வு..!

Q

சி.பி.எஸ்.இ., தேர்வுக் கட்டுப்பாட்டு தலைவர் சன்யாம் பரத்வாஜ் கூறியதாவது: 2026ம் ஆண்டு முதல், ஆண்டுக்கு இரண்டு முறை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை சி.பி.எஸ்.இ., அங்கீகரித்துள்ளது.

முதல் கட்ட தேர்வுகள் பிப்ரவரியிலும், இரண்டாவது கட்ட தேர்வுகள் மே மாதத்திலும் நடைபெறும். மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கும் வகையில் இந்த நடைமுறை இருக்கும். முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஏப்ரலிலும், இரண்டாம் கட்ட பொதுத்தேர்வு முடிவு ஜூனிலும் வெளியிடப்படும்.

முதல் தேர்வில் கலந்து கொள்வது கட்டாயம். இரண்டாம் தேர்வில் விருப்பமிருந்தால் கலந்து கொள்ளலாம். முதல் பொதுத்தேர்வில் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் கூடுதல் மதிப்பெண்கள் பெற முடியும்.

கணிதம், அறிவியல், சமூக அறிவியல், மொழிப்பாடம் ஆகியவற்றில் ஏதேனும் மூன்றில் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். உள்மதிப்பீடு தேர்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like