1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற சைக்கோ கணவன்!

கர்ப்பிணி மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொன்ற சைக்கோ கணவன்!


குடிபோதையில் கடப்பாரை கம்பியால் நான்கு மாத கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் அருகே கிழம்பி புதூர் பகுதியில் வசித்து வந்த ஹரி(25), தேவி(21) தம்பதி கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி இருவரும் திருமணம் நடைபெற்றது. தேவி 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்குப் பின்னர் ஹரி தினமும் குடித்துவிட்டு வந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.  


இந்நிலையில் நேற்றும் குடித்து விட்டு தேவியிடம் பிரச்னை செய்த ஹரி ஆத்திரத்தில் வீட்டிலிருந்த கடப்பாரை கம்பியை எடுத்து தேவியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாலுசெட்டி சத்திரம் காவல்துறையினர் சடலத்தைக் கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து தேவியின் கணவர் ஹரியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like