இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை..!
பி.எஸ்.எல்.வி-சி56 ராக்கெட்டை இன்று இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. சிங்கப்பூரின் டி.எஸ்.-எஸ்.ஏ.ஆர் என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 6:30 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கிய நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், பழவேற்காடு மீனவர்கள் இன்று வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரின் ஒரு செயற்கைக்கோள் உள்பட ஏழு செயற்கைக்கோள்களை பிஎஸ்எல்வி சி56 (PSLV C56) ராக்கெட் மூலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட்டவுன் நேற்று (சனிக்கிழமை) தொடங்கியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்த TeLEOS-2 செயற்கைக்கோள் ஏப்ரல் மாதம் பி.எஸ்.எல்.வி. சி.55 (PSLV-C55) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு செயற்கைக்கோள் விண்ணில் ஏவ ஜூலை 30ஆம் நாள் முடிவு செய்யப்பட்டது. இந்த முறை DS-SAR என்ற செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட இருக்கிறது.
சிங்கப்பூரின் இந்த DS-SAR செயற்கைக்கோள் ரேடார் இமேஜிங் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இத்துடன் நியூஸ்பேஸ் இந்தியா (NewSpace India) என்ற தனியார் நிறுவனத்தின் ஆறு செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி சி56 (PSLV-C56) ராக்கெட் மூலம் ஏவப்படும். 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) செயற்கைக்கோள்கள் செலுத்தப்படும். ஜூலை 30ஆம் தேதி (இன்று) காலை 06:30 மணிக்கு ஶ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து 7 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் பாயும்.
இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கியுள்ளதை என இஸ்ரோ தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 360 கிலோ எடை கொண்ட DS-SAR செயற்கைக்கோள் சிங்கப்பூரின் பல்வேறு அரசு நிறுவனங்களுக்கு தேவையான செயற்கைக்கோள் படங்களை அனுப்பபயன்படுத்தப்படும். இது இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. பகல், இரவு என அனைத்து வானிலையிலும் செயல்படும் வகையிலும், தெளிவான படங்களை அனுப்பக்கூடிய திறனுடனுடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 7 செயற்கைக் கோள்கள் இன்று விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில், இஸ்ரோ அதிகாரிகள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சென்று, பிஎஸ்எல்வி சி56 (PSLV-C56) ராக்கெட் மாதிரியை வைத்து வழிபாடு நடத்தியுள்ளனர்.