டிச.4ல் விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.,!
விண்வெளி ஆராய்ச்சியில் முன்னணியில் இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ, நம் நாட்டுக்குத் தேவையான செயற்கைக்கோள்கள் மட்டுமின்றி, வர்த்தக ரீதியாக வெளிநாடுகளுக்கும் செயற்கைக்கோள்களை ஏவி வருகிறது.
அந்த வகையில், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவன செயற்கைக் கோளான ப்ரோபாவை டிச.,4ல் விண்ணில் செலுத்துகிறது. இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி., சி 59 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து இந்தச் செயற்கைக்கோள் ஏவப்படுகிறது.
மொத்தம் 1800 எடையுள்ள ப்ரோபா செயற்கைக் கோள், சூரியனை சுற்றியுள்ள வளிமண்டலத்தில் ஆய்வு செய்வதற்காக, ஐரோப்பிய விண்வெளி மையத்தால் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் ஏவப்படும் நிகழ்ச்சியை நேரில் காண விரும்புவோர், இன்று 28ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம் என்றும் இஸ்ரோ அறிவித்துள்ளது.