1. Home
  2. தமிழ்நாடு

தமிழகம் முழுவதும் த.வெ.க.வினர் போராட்டம்..!

Q

மத்திய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அரசியலமைப்பின் மாண்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என த.வெ.க. தலைவர் விஜய் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன்படி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் ஏராளமான த.வெ.க.வினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். சென்னையில் சுமார் 6 இடங்களில் த.வெ.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பனையூரில் த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பினரும் பங்கேற்றுள்ளனர்.

Trending News

Latest News

You May Like