1. Home
  2. தமிழ்நாடு

நாளை தமிழ்நாடு முழுவதும் போராட்டம்! சிபிஐ (எம்) அதிரடி...!

1

மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சிபிஐ (எம்) கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் போராட்டத்தை அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்," கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமை ஏற்றியுள்ள ஒன்றிய அரசின் நாசகர பட்ஜெட்டை எதிர்த்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எதேச்சதிகரமாக செயல்படும் ஒன்றிய பாஜக அரசினை கண்டித்தும் பிப்ரவரி 4 ஆம் தேதி தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.

இதனால் அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது என்றே கூறலாம். ஏற்கனவே மத்திய பட்ஜெட் பணக்காரர்களுக்கான பட்ஜெட் எனவும், ஏழைகளை ஏமாற்றும் பட்ஜெட் எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் மத்திய பட்ஜெட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கட்சி அணிகளும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டு என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ.எம்) தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.” எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like