1. Home
  2. தமிழ்நாடு

ஜூன் 24-ல் கண்டன ஆர்ப்பாட்டம்!

1

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பிற்கான சீட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. நடப்பாண்டில் நீட் தேர்வானது கடந்த மே 5ம் தேதி நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மனு தாக்கல் செய்து வந்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து ஜூன் 24-ல் திமுக மாணவரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் தேர்வு தமிழகத்திற்கு தேவையில்லை என நிறைவேற்றி அனுப்பியுள்ள சட்ட மசோதாவுக்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது.

Trending News

Latest News

You May Like