சைலண்ட்டாக நடக்கும் விபச்சார தொழில்..!
வேலூர் மாநகரின் பாபுராவ் வீதியில் இயங்கும் ஒரு தங்கும் விடுதி, அதே போல் காகித பட்டறையில் 2 விடுதிகளில் விபச்சாரம் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சாய்நாதபுரம், ஓல்டு டவுன், சத்துவாச்சேரியில் 3 இடங்கள், அரியூரில் 3 இடங்களில் உள்ள தங்கும் விடுதிகள், காட்பாடியில் 7 இடங்களில் உள்ள தங்கும் விடுதிகள், மசாஜ் சென்டர்கள், குடியாத்தம் நகரில் 9 இடங்களில் உள்ள லாட்ஜ்களில் விபச்சாரம் நடந்து வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதிலும் பல்வேறு பகுதிகளில் இருந்து வேலைத்தேடி வரும் இளம்பெண்களை குறிவைத்து ஒரு கும்பல் விபச்சாரத்தில் தள்ளியது தெரியவந்துள்ளது. மசாஜ் சென்டர்களில் நடக்கும் விபச்சாரங்களை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாருக்கு மாமூல் கொடுத்து வந்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
மேலும் விபச்சாரம் நடக்கும் சில தங்கும் விடுதிகளை வேலூர் மாவட்ட அரசியல் பிரமுகர்கள் நடத்தி வருவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களில் அதிரடி ஆக்ஷனில் இறங்க டி.எஸ்.பி.க்களுக்கு வேலூர் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.