மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 200 பேர் மீது வழக்குப்பதிவு!

தடையை மீறி கிராமசபை கூட்டம் நடத்தியதாக திமுக தலைவர் ஸ்டாலின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழக அரசு மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டத்தை ரத்து செய்தது. ஆனாலும் தடையை மீறி திருவள்ளூர் மாவட்டம் புதுசத்திரம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில்,கூட்டம் கூடியதாக கொரட்டூர் கிராம நிர்வாக அலுவலர் அல்போன்சா, வெள்ளவேடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி நாசர், பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி உள்ளிட்ட 200 பேர் மீது புகார் அளித்திருந்தார்.
அந்தப் புகாரின் பேரில் வெள்ளவேடு காவல் துறையினர், தடை உத்தரவை மீறுதல், அரசு உத்தரவை மீறுதல், கொரோனா பேரிடர் சட்டத்தை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் 200 பேரின் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
newstm.in