1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி க்யூ ஆர் கோடு மூலம் சொத்துவரி செலுத்தலாம்..!

1

தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டிற்கும் ஒருமுறை சொத்து உரிமையாளர்களிடமிருந்து சொத்துவரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அதாவது, சொத்துவரியில் 5% அல்லது ரூ.5000 வரையிலும் ஊக்கத்தொகை வழங்கபடுகிறது.

அந்த வகையில், சென்னையில் மட்டுமே அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் ரூ.372.74 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், இந்த சொத்து உரிமையாளர்களுக்கு ரூ.8.57 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

குடிநீர் வரி, சொத்து வரி போன்ற வரிகள் செலுத்துவதற்கு க்யூஆர் கோடு மாநகராட்சி சார்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளுக்குமென கொடுக்கப்பட்டுள்ள க்யூ ஆர் கோடு மூலமாகவே பொதுமக்கள் ஸ்கேன் செய்து சரியான தொகையை செலுத்திக்கொள்ளாம்.

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள இந்த செயலி தாம்பரம் மாநகராட்சியின் 48-வது வார்டில் சோதனை முறையில் அறிமுகம் செய்து உள்ளனர். இந்த வார்டில் உள்ள 2976 குடியிருப்புகளில் முதல் கட்டமாக 1500 குடியிருப்புகளில் கியூ.ஆர். கோடு குறியீடு அட்டை ஒட்டப்பட்டு இருக்கிறது. இதனை முக்கியமாக திடக்கழிவு மேலாண்மைக்காகவும் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளனர்.

துப்புரவு ஊழியர்கள் ஒரு கட்டிடத்தில் ஒட்டப்பட்டு உள்ள கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து அங்கிருந்து சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டதா? இல்லையா? என்பதையும் பதிவிட முடியும். இதன் மூலம் பொதுமக்களுக்கு அன்றாடம் கிடைக்கக்கூடிய சேவை சரியாக செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க முடியும். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள், மருத்துவம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் புகார் அளிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கியூ.ஆர். கோடை ஸ்கேன் செய்து தங்கள் பகுதியில் உள்ள குறைகளையும் புகாராக தெரிவிக்க முடியும். பரிசோதனை அடிப்படையில் முதல் கட்டமாக 48-வார்டு பகுதியில் அனைத்து வீடுகளிலும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு வருகிறது. இதன் பின்னர் மாநகராட்சி முழுவதும் கியூ.ஆர். கோடு ஒட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பொதுமக்களின் வீண் அலைச்சல், நேர விரயம் தவிர்க்கப்படும்
 

Trending News

Latest News

You May Like