இன்னைக்கு இந்த மந்திரத்தை உச்சரித்தால் வாழ்க்கையே மாறிடும்!
பிரதோஷம் என்பது மாதம் இருமுறை வளர்பிறை , தேய்பிறைகளில் வரும் திரயோதசி திதியில் வரும் சந்தியா வேளை. இந்த வேளையில் சிவபெருமான் நந்தியின் கொம்புகளில் நின்று ஆடுவதாக சிவபுராணம் கூறுகின்றது. இந்த ஆனந்த தாண்டவத்தை முக்கோடி தேவர்களும், முனிவர்களும் கண்டு பக்தி பரவசப்படுகின்ற நேரம்.
இதுவரை பிரதோஷ வழிபாடுகளில் சிவபெருமானை மட்டும் வழிபட்டு வந்தவர்கள் மறக்காமல் நந்தியம் பெருமானுக்கு நடைபெறும் பூஜைகளிலும் கலந்து கொள்ளவும். பிரதோஷ வேளையிலும், விரதமிருந்து, பூஜைகளைச் செய்பவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது ஐதீகம்.
கோவிலுக்கு சென்று பூஜைகளில் கலந்து கொண்டு அமைதியாய், இறைவனை மனதிற்குள் தியானித்து பிரதோஷ வேளையில் உச்சரிக்க வேண்டிய பஞ்சாக்ஷர மந்திரமான ‘ஓம் நமச்சிவாய’மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனை செய்து வர வாழ்வில் அனைத்து வளங்களும் வந்து சேரும். நமது முன்னேற்றத்தை தடுக்கும் கர்ம வினைகள் அதுவாகவே அகன்று உடலும், மனமும் ஆரோக்கியமடையும். குடும்பத்தில் அமைதியும்,மகிழ்ச்சியும் பெருகும். நம்மை எதிரிகளாக நினைப்பவர்கள், அவர்களாகவே விலகிச் சென்று விடுவார்கள்.
மேலும் பிரதோஷ வேளையில்
ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச
விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
திருச்சிற்றம்பலம் !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
ஸ்லோகத்தை 18 முறை சொல்வது சிறப்பான பலனை அளிக்கும்.
தொடர்ந்து பிரதோஷங்களில் விரதமிருந்து வழிபட்டு வர வாழ்வில் எல்லா வளமும் நிறைவதை அனுபவப் பூர்வமாக உணரலாம்.