1. Home
  2. தமிழ்நாடு

சரோஜா தேவி சாகும் வரை காப்பாற்றிய சத்தியம்..!

1

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் சரோஜா தேவி.நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 87. 


நாட்டின் உயரிய விருதுகளான பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய விருதுகளை வென்றுள்ளார். ‘கன்னடத்து பைங்கிளி’, ‘அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர். தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக இருந்த நடிகர்கள் எம்ஜிஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனுடன் பிஸியாக நடித்த நடிகையென்றால் அது சரோஜா தேவிதான்.

சினிமாவுக்குள் நுழைய இருந்த சரோஜா தேவியிடம் அவரது தாய் சத்தியம் ஒன்றை வாங்கியதாக கூறப்படுகிறது. அதை தனது கடைசி படம் வரை சரோஜா தேவி காப்பாற்றினார். அதாவது, “நீ சினிமாவில் எந்த நிலையில், ஆபாச காட்சிகளிலோ, அரைகுறை ஆடைகளிலோ நடிக்க கூடாது” என்று கூறி சத்தியம் வாங்கினாராம்.

அந்த காலகட்டத்தில் சினிமாவில் கோலோச்சிய நடிகைகளுக்கு அரசியலில் இருந்து அழைப்பு வரும். அப்படிதான் சரோஜா தேவிக்கும் அரசியல் அழைப்பு வந்திருக்கிறது. ஒருமுறை ராஜீவ் காந்தி, நடிகை சரோஜா தேவியை டெல்லிக்கு அழைத்து பேசி இருக்கிறார். எம்பி பதவி தருவதாக கூறி அவரை கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் போட்டியிட சொன்னாராம். ஆனால் இதற்கு நோ சொல்லிவிட்டாராம் சரோஜா தேவி. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ஹைலைட்டானது.

தன்னுடைய தந்தை தனக்கு நேர்மையாக வாழ சொல்லிக்கொடுத்திருக்கிறார். அப்படி தான் வாழ்கிறேன். அதேபோல தான் வாழ விரும்புகிறேன். அரசியல் என வந்துவிட்டால் எல்லா நேரத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா என்பது தெரியவில்லை. அரசியலில் ஒரு தரப்புக்கு நல்லவராக இருந்தால், மற்றொரு தரப்புக்கு கெட்டவராக மாறிவிடுவோம். நான் எல்லாருக்குமே நல்லவளாக இருக்க விரும்புகிறேன். அதனால் தனக்கு அரசியல் வேண்டாம் என்று சொல்லி நிராகரித்திருக்கிறார் சரோஜா தேவி.

எனினும் ராஜீவ் காந்தி, "சரி. ஆனால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்துகொடுங்கள்" என கேட்டாராம். அதற்கு சரோஜா தேவியும் சத்தியம் செய்துகொடுத்தாராம். அந்த சத்தியத்தை கடைசி வரை மீறவில்லை.

Trending News

Latest News

You May Like