நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!

நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!

நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு !!
X

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்றிரவு திடீரென பலத்த மழை பெய்தது. 

இந்நிலையில் தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தர்ருபுரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, புதுச்சேரியிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

இதேபோன்று அப்பகுதி கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்  எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

newstm.in 

Next Story
Share it