1. Home
  2. தமிழ்நாடு

இன்று முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்..!

1

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. சமூக நீதி மற்றும் சமூக சமத்துவத்திற்காக போராடிய தியாகி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆண்டுதோறும் பரமக்குடியில் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, அந்த நாளில் பரவலான மக்கள் திரளும், அரசியல் நிகழ்வுகளும் நடைபெற வாய்ப்புள்ளதால், சட்டம்-ஒழுங்கை பராமரிப்பது சவாலாக இருக்கும். இதனை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வருபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை மாவட்ட ஆட்சியர் முன்பே வெளியிட்டுள்ளார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, மற்றும் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள், ஒன்றியங்களுக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி உத்தரவிட்டுள்ளார்.

அதே நேரத்தில், இந்த விடுமுறையால் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அந்த விடுமுறைக்கு பதிலாக வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், மாணவர்களின் பாடநெறிகள் மற்றும் தேர்வு தயாரிப்பில் இடையூறு ஏற்படாமல் இருக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

Rமேலும், ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை காலை முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியை ஒட்டி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்தார். இன்று காலை முதல் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை ஒட்டி அக்டோபர் 25 முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like