2 வருடத்திற்கு திட்டம் நீட்டிப்பு! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான ஹாப்பி நியூஸ்..!
இந்திய நாட்டில் உள்ள வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், குறைந்தபட்சம் வருமானம் இல்லாத முதியவர், தீராத நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், மலைவாழ் குடும்பங்கள் ஆகிய மக்களுக்கு அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் பொருட்களை மானிய விலையில் இந்த திட்டத்தின் மக்களுக்கு வழங்கி வருகிறது. மத்திய அமைச்சரவை கூட்டம் கடந்த வாரம் நடத்தப்பட்ட நிலையில் பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.
அதில் குறிப்பாக நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன் பெற்று வரும் அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம் குறித்த புதிய ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்படி அந்தியோதயா அன்ன யோஜனா திட்ட பயனாளிகளுக்கு வழங்கி வரும் மானிய விலையிலான சர்க்கரை திட்டத்தை மார்ச் 31, 2026 வரை நீட்டிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் மூலம் கிலோ ரூபாய் 18.50 என்ற விலையில் ஒரு கிலோ சர்க்கரை விகிதத்தில் வழங்கப்பட்டு வருகிறது.