1. Home
  2. தமிழ்நாடு

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்: கண்டுகொள்ளாத கல்லூரி முதல்வர்... மாணவி தீக்குளிப்பு!

1

ஒடிசா பாலச்சூரில் பக்கீர் மோகன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு இரண்டாம் ஆண்டு பயிலும் பிஎட் மாணவி ஒருவர் ஒருவருக்கு அவரது பேராசிரியரும் துறைத் தலைவருமான சமீரா குமார் சாகு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார்.
 

மேலும் தனது ஆசைக்கு மாணவி இணங்காவிட்டால் அவரால் டிகிரி கம்ப்ளீட் பண்ண முடியாது என்றும் பேராசிரியர் அந்த மாணவியை மிரட்டி இருக்கிறார். இதனால் பயந்து போன அந்த மாணவி இதுகுறித்து கல்லூரி முதல்வரிடம் புகார் செய்ய சென்றார். ஆனால் இந்த புகாரை கல்லூரி முதல்வர் திலீப் குமார் போஸ் முறையாக விசாரிக்கவில்லை என்று தெரிகிறது.

மேலும் மாணவியிடம் இது பற்றி பெரிதுபடுத்தாமல் செல்லுமாறு கல்லூரி முதல்வர் எச்சரித்து இருக்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி வேறு வழியில்லாமல் கல்லூரி வளாகத்திலேயே தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அவரது உடலில் தீ பரவியதால் அங்கிருந்த சக மாணவர் ஒருவர் விரைந்து சென்று மாணவியை காப்பாற்ற முயன்றார்.இதில் அந்த மாணவருக்கும் உடலில் தீ பற்றி எரிந்தது. கல்லூரி வளாகத்தில் மாணவரும் மாணவியும் தீப்பிடித்து அலறிய சம்பவம் அங்கு பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதை அடுத்து கல்லூரி ஊழியர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அடுத்து புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு அந்த மாணவி 90% தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதேபோல அவரை காப்பாற்றும் முயன்ற இளைஞருக்கும் 70 சதவீத தீக்காயம் ஏற்பட்டது. கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு இதுபோன்ற பரிதாபகரமான சூழல் ஏற்பட்டு இருப்பது ஒடிசா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


 

Trending News

Latest News

You May Like