1. Home
  2. தமிழ்நாடு

புதிய இசை நிறுவனத்தை தொடங்கிய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்..!

1

தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தனது கே.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் ஒரு புதிய இசை நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த புதிய முயற்சி மூலம், அவர் இசைத்துறையில் தனது பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இது இசைத்துறையில் புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு இசைத்துறையில் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே .கணேஷ் புதிதாக 'வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்' எனும் இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த இசை நிறுவனத்தின் அறிமுக விழாவில் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசைக் கலைஞர்களான ஏ. ஆர். ரஹ்மான் - அனிருத்- டி. இமான்- உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.

வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் பற்றி அதன் உரிமையாளரும், நிறுவனருமான தயாரிப்பாளர் ஐசரி கே .கணேஷ் பேசுகையில், '' சர்வதேச இசை உலகில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும்.

ஏராளமான தமிழ் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் தொடங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.மேலும் இந்த இசை நிறுவனம் சர்வதேச அளவிலான சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும், அவர்கள் உருவாக்கும் சுயாதீன இசை படைப்புகளுக்கும் வாய்ப்பு வழங்கி.. அவர்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும், விரைவில் இந்த இசை நிறுவனத்தில் இருந்து இசை அல்பங்கள் -விடியோ இசை அல்பங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது

Trending News

Latest News

You May Like