1. Home
  2. தமிழ்நாடு

சிக்கல்.. பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதில்.. விரைவுப் பேருந்து முன்பதிவு நிறுத்தம்..!

சிக்கல்.. பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதில்.. விரைவுப் பேருந்து முன்பதிவு நிறுத்தம்..!


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்தது.

இதனால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் இரவு நேர ஊரடங்கும், வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரவு ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய தமிழக போக்குவரத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போன்று பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.
சிக்கல்.. பொங்கல் முடிந்து சென்னை திரும்புவதில்.. விரைவுப் பேருந்து முன்பதிவு நிறுத்தம்..!
இந்நிலையில், ஜனவரி 16-ம் தேதிக்கான விரைவுப் பேருந்து முன்பதிவை அரசுப் போக்குவரத்துக் கழகம் நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், பொங்கல் பண்டிகை முடிந்து சொந்த ஊரிலிருந்து சென்னை திரும்புவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அன்று முன் பதிவு செய்துள்ளவர்கள் வேறு தேதியில் பயணிக்க தேவையான ஏற்பாடுகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். ஜனவரி 16ம் தேதி மட்டும் விரைவுப் பேருந்தில் பயணிக்க 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதேபோல், வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு முடக்கம் என்பதால் பேருந்துகள் இயங்காது. அன்று பயணிக்க முன்பதிவு செய்தவர்களுக்கு பயண கட்டணத்தை திருப்பி தர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like