முதல் திருமண நாளை கொண்டாடுவதில் பிரச்னை… தூக்கில் தொங்கிய பெண்!

திருமண நாளை கொண்டாடுவதில் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மதுரவாயல் கங்கா நகர் பகுதியை சேர்ந்த தம்பதி சுரேஷ், சந்தியாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. இந்நிலையில் திருமண நாளை தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டாடலாம் என சுரேஷ் கூறியுள்ளார்.
பணம் செலவாகும் என்பதால் திருமண நாளை கொண்டாட வேண்டாம் என சந்தியா கூறியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து வீட்டை விட்டு வெறியே சென்ற சுரேஷ் மாலை மனைவி சந்தியாவுக்கு கால் செய்துள்ளார்.
ஆனால் அவர் செல்போனை எடுக்காததால் தனது தாயை அனுப்பி பார்க்கச் சொன்னார் சுரேஷ். அப்போது சந்தியா வீட்டில் தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது மாமியார், அதாவது சுரேஷின் தாய் அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து சந்தியாவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். திருமணமாகி ஓராண்டு ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
newstm.in