1. Home
  2. தமிழ்நாடு

பிரியங்கா பையால் பரபரப்பு..! நேற்று பாலஸ்தீனம்: இன்று வங்கதேசம்..!

1

காங்கிரஸ் பொதுச்செயலரும், லோக்சபா எம்.பி.,யுமான பிரியங்கா ஆரம்பம் முதலே பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துகள் தெரிவித்து வருகிறார். நேற்று பார்லி.க்கு வந்த பிரியங்கா, பாலஸ்தீனம் என்று அச்சிடப்பட்டு இருந்த ஒரு பையை வைத்து இருந்தார். மேலும், அதில் பாலஸ்தீனம் தொடர்பான சின்னங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு ஆதரவான வாசகங்கள் கொண்ட பையுடன் பிரியங்கா வந்தார். அதில், ”வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம்,” என அச்சிடப்பட்டு இருந்தது.

நேற்று லோக்சபாவில் பூஜ்ஜிய நேரத்தில் பிரியங்கா பேசும் போது வங்கதேசத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான துயரங்கள் குறித்த விவகாரத்தை அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு எழுப்ப வேண்டும். வங்கதேச அரசுடன் ஆலோசனை நடத்தி வேதனையில் உள்ளவர்களுக்கு ஆதரவான முடிவை ஏற்படுத்த வேண்டும் எனக்கூறி இருந்தார்.

ஒரு வாரத்திற்கு முன்பு, பிரதமர் மோடி மற்றும் கெளதம் அதானி ஆகியோரின் படமும், மறுபுறம் “மோடி அதானி பாய் பாய்” என்ற வாசகமும் அச்சிடப்பட்ட பையை பார்லிக்கு கொண்டு வந்தார்

Trending News

Latest News

You May Like