1. Home
  2. தமிழ்நாடு

நடிகை பிரியங்கா சோப்ரா அயோத்தி கோவிலில் நடிகை சாமி தரிசனம்..!

Q

அயோத்தியில் மிக பிரம்மாண்டமான 3 அடுக்குகள் கொண்ட ராமர் கோவில் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வருகிறது. அங்கு கடந்த ஜனவரி மாதம் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. 
இதையடுத்து, அயோத்தி நகருக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பால ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் உள்பட பலர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் தனது குழந்தையுடன் அயோத்தி ராமஜென்ம பூமிக்கு நேற்று சென்றார். அங்கு பால ராமரை தரிசனம் செய்தார். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்களை கோவில் பூசாரி தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like