1. Home
  2. தமிழ்நாடு

அம்பானி இல்ல திருமண விழாவில் அட்லி - பிரியா அட்லி கலக்கலான டான்ஸ்..!

1

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டங்கள் மிக சிறப்பாக நடைபெற்று கொண்டு இருக்கின்றன. அவர்களின் இல்ல திருமண விழாவை இந்த உலகமே உற்று நோக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. 

ஜூலை 12ம் தேதி ஜியோ உலக மாநாட்டு மையத்தில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெற உள்ளது. திருமணத்துக்கு முன்னதான சடங்குகள் மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருமணத்துக்கு முந்தைய சங்கீத் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பல பாலிவுட் திரைபிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியா அட்லி ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அப்போது ஒரே மாதிரியான டிசைன் கொண்ட காஸ்டியூம் அணிந்து இருந்த அவர்கள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நட்சத்திரங்களை போன்று தாங்களும் நடனம் ஆடி உள்ளார்கள். அப்போது பிரியா அட்லி கிளாமரான உடையுடன் காணப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்த விழாவில் கலந்து கொண்ட மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் பாலிவுட் திரையுலகின் பிரபலமான நடிகையுமான ஜான்வி கபூர் மயில் போன்ற உடையில் காட்சி அளித்தார். அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த உடை அணிவதற்கான காரணத்தையும் மிக பெரிய விளக்கமாக கொடுத்து இருந்தார். 

"இந்த கொண்டாட்டத்தில் அர்த்தமுள்ள ஒரு உடையை அணிய விரும்பினேன். இயற்கை அழகு, வனவிலங்கு என முற்றிலும் வித்தியாசமான ஒரு தனிமையான உலகம், நேசிக்கும் மனிதர்கள் என ஜாம்நகரில் எனக்கு ஏராளமான ஸ்பெஷல் மெமரிஸ் இருந்தன. அதை இன்ஸ்பிரேஷனாக எடுத்து கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தோம். ஜாம்நகரில் நீங்கள் எங்கு பார்த்தாலும், அழகான மயில்கள் உங்களை வரவேற்கும்.உங்கள் புல்வெளிகளுக்குள் நுழைவது, அவற்றின் இறகுகளை அசைப்பது, சாலைகளைத் தாண்டிச் செல்வது, சில சமயங்களில் காலை உணவை உண்பது இப்படி எங்கும் காணலாம். அதனால் மயில் நிற லெஹங்காவாக ஆரம்பித்தது, முழுக்க முழுக்க மயில் இறகு கொண்ட ஸ்கர்ட்டில் முடிந்தது!!

ஆனந்த் மற்றும் ராதிகா இருவருமே அவர்களின் வீட்டை நம்முடையதுபோல உணர வைப்பார்கள். இந்த மயில் லெஹங்காவை உருவாக்கிய கலைஞர்களுக்கு நன்றிகள். என்னை சிறப்பாக உணர வைத்ததற்கு நன்றி" என குறிப்பில் தெரிவித்து இருந்தார். 

Trending News

Latest News

You May Like