1. Home
  2. தமிழ்நாடு

பள்ளி மாணவன் மீது ஏறி இறங்கிய தனியார் பள்ளி வேன்... பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியானது..!

1

கோவையை சேர்ந்தவர் சண்முகம். இவரது இரண்டு மகன்கள் சிங்காநல்லூர் படகு துறை அருகே உள்ள பிரபல தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பும், 5ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் தனியார் வேன் மூலம் பள்ளிக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 18ஆம் தேதி வழக்கம் போல் வேனில் வீட்டிற்கு வந்துள்ளனர்.அப்போது அண்ணன், தம்பி இருவரும் வீட்டிற்கு அருகே வேனிலிருந்து கீழே இறங்க முற்படும்போது, அண்ணன் முதலில் கீழே இறங்கிய நிலையில், தம்பி வேனில் இருந்து இறங்குவதற்கு முன்பே ஓட்டுநர் வேனை இயக்கியுள்ளார்.

பயத்தில் என்ன செய்வது என தெரியாமல் சிறுவன் ஓடும் வேனில் இருந்து இறங்கியுள்ளார்.அப்போது தவறுதலாக சக்கரத்தில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இதனால் அச்சிறுவன் மீது வேன் டயர் ஏறி எறங்கியதில் படுகாயம் அடைந்துள்ளான். இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக சிறுவனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மருத்துவமைனையில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Trending News

Latest News

You May Like