1. Home
  2. தமிழ்நாடு

ஆம்னி பேருந்து ஓட்டுநர் கட்டி வைத்து துன்புறுத்திய தனியார் பஸ் உரிமையாளர்..!

1

பேருந்து நிறுவன அலுவலர்கள்  பேருந்து நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவரை கயிற்றால் ஜன்னலில் கட்டி வைத்து விசாரணை நடத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்து நிறுவனத்திற்கு தெரியாமல் ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்றதாகவும், அந்த பயணிகளை ஏற்றியதற்கான பணத்தை தனது போன் மூலமாக பெற்றுக் கொண்டு, பேருந்து உரிமையாளரிடம் ஆம்னி பேருந்து ஓட்டுநர் பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஆம்னி பேருந்து ஓட்டுநர் அதிக விலைக்கு பயணிகளை ஏற்றி பணம் பெற்ற விவகாரம் ஆம்னி பேருந்து உரிமையாளருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து, மதுரையில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து ஓட்டுநரைத் தாக்கியுள்ளனர்.



மேலும், விசாரணையை நடத்துவதாகக் கூறி ஓட்டுநரின் கைகளை பின்னோக்கி ஜன்னல் கம்பியில் கட்டி வைத்து நீண்ட நேரம் அடித்து சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இது தொடர்பாக மனித உரிமை ஆணையமும், தமிழ்நாடு காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி தனியார் பேருந்து நிறுவன உரிமையாளர் மற்றும் தாக்குதலில் ஈடுபட்ட பேருந்து நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like