1. Home
  2. தமிழ்நாடு

ஏற்காட்டில் நிகழ்ந்த தனியார் பேருந்து விபத்து - சேலம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

1

நேற்று மாலை 5.15 மணி அளவில் ஏற்காடு பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து ஒன்று சேலம் நோக்கி புறப்பட்டுள்ளது. மணி என்பவர் இந்த தனியார் பேருந்தை ஓட்டி வந்த நிலையில், அப்பேருந்தில் 50க்கும் மேற்பட்டோர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்பேருந்து 11வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து, சுமார் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர சம்பவத்தில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இது தொடர்பாக தனியார் பேருந்து ஓட்டுனர் மணி மீது ஏற்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "சேலம் மாவட்டம் ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று மாலை தனியார் பேருந்து விபத்துக்குள்ளாகி 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் துயரத்துக்குள்ளானேன்.

விபத்து குறித்த தகவல் நேற்று கிடைத்ததும், உடனடியாக மாவட்ட ஆட்சியரைத் தொடர்பு கொண்டு மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியதோடு, காயமடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உரிய உயிர்காப்பு சிகிச்சைகளும் அளிக்கப்படுவதை உறுதிசெய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன்.இவ்விபத்தில் உற்றாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த விபத்தை தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோடைகாலம் என்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் ஏற்காட்டிற்கு வருகின்றனர்.

அனுபவம் உள்ள ஓட்டுநர்கள் மட்டுமே ஏற்காடு மலைப்பகுதியில் வாகனங்கள் இயக்குவதற்கு அனுமதிக்கப்படுவர். இதற்காக ஏற்காடு போலீசார் மற்றும் வட்டாரப் போக்குவரத்து துறையினர் மூலம் வாகனங்களை சோதனை செய்த பின்பே அவர்கள் அனுமதிக்கப்படுவர்.

அதேநேரம், மலைப் பகுதிகளில் வாகனங்களை இயக்க அனுமதிக்கப்பட்ட 30 கிலோமீட்டர் வேகத்திற்கு அதிகமாகவும் மற்றும் விதிகளை மீறி வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like