1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடகாவில் தனியார் வாகன சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்..!

1

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது. அந்த கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் தனியார் வாகன சங்கங்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், பெங்களூருவில் மக்கள் பலர் தனியார் ஆட்டோ, டாக்சியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

அரசின் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பயன்பாடு குறைந்துள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக குற்றம்சாட்டி இருக்கின்றனர். மேலும் இது குறித்து போக்குவரத்துறை அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களின் கோரிக்கைக்கு அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. எனவே இன்று தனியார் வாகன சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் படி இன்று (செப்.11) அதிகாலை 12 மணி தொடங்கி இரவு 12 மணி வரை தனியார் ஆட்டோக்கள், டாக்சிகள், விமான நிலைய டாக்சிகள் போன்றவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகமாக பள்ளி மாணவர்கள் பயணம் செய்வதால், சில பள்ளிகள் இன்று (செப்.11) விடுமுறையை அறிவித்துள்ளனர். மேலும் இந்த வேலை நிறுத்தத்தை சமாளிக்க அரசு கூடுதல் பேருந்துகளை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like