1. Home
  2. தமிழ்நாடு

எம்பாமிங் செய்து பாதுகாக்கப்பட்டு வந்த கைதியின் உடல் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம்..!

1

பிலடெல்பியாவின் ரீடிங் பகுதியில் பிக்பாக்கெட் செய்து பிடிப்பட்ட நபர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பால் இறந்தார். அந்த நபர் சிறையில் அடைக்கப்பட்ட போது தனது உண்மையான பெயரை கூறாமல் ஜேம்ஸ் மர்பி என்று பதிவு செய்திருந்தார். அவரது உடலை யாரும் வாங்கி செல்ல வரவில்லை.

இதையடுத்து அவரது உடலை உரியவர்கள் பெற்று கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை பயன்படுத்தி மம்மியாக மாற்றினர். அந்த உடலை பதப்படுத்தி பாதுகாத்து வந்தனர். அவருக்கு ஸ்டோன்மேன் வில்லி என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக ரீடிங் பகுதியில் உள்ள ஆமன் தேவாலயத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அதை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் கைதியின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி ஸ்டோன்மேன் வில்லி உடல் அங்குள்ள பாரெஸ்ட் ஹில்ஸ் மெமோரியல் பூங்காவில் உள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக ஸ்டோன்மேன் வில்லி, ஐரிஷ் வம்சாவளியை சேர்ந்தவர் என்றும், அவர் நியூயார்க்கில் வசித்ததும், மதுவுக்கு அடிமையானவர் என்பதையும் கண்டு பிடித்தனர்.அவரது தந்தை ஒரு பணக்கார தொழில் அதிபர் ஆவார். தான் திருட்டு வழக்கில் சிக்கியதால் தந்தை பெயரை கொடுக்க விரும்பாததால் தனது உண்மையான பெயரை கூறாமல் போலி பெயரை பயன்படுத்தினார் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like