1. Home
  2. தமிழ்நாடு

பிளேடை விழுங்கிய கைதி… அதிர்ச்சி சம்பவம்!

பிளேடை விழுங்கிய கைதி… அதிர்ச்சி சம்பவம்!


நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கைதி பிளேடால் தன்னைத்தானே அறுத்துக் கொண்டு பிளேடை விழுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீனம்பாக்கம் காவல்நிலைய வழக்கின் பழைய குற்றவாளியான மாங்காட்டை சேர்ந்த ஜான்பால் () கருப்பு சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவர் பிளேடால் தன்னைத்தானே அறுத்துக் கொண்டு அதே பிளேடை வாயில்போட்டு விழுங்கிவிட்டார்.

அதன்பிறகு அந்த நபர் நீதிமன்ற வளாகத்திலேயே மயங்கி கீழே விழுந்தார். வாயிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட அவரை மீட்ட போலீசார் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர்.

சிறையில் இருந்த கைதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது பிளேடை விழுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கைதியிடம் எப்படி பிளேடு கிடைத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பரங்கிமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like